
🔊To listen to this news in Tamil, Please select the text.
வைரக் கல்லாக ஜொலிக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசினோடு நஜிப் ரசாக்கை ஒப்பிடக் கூடாது என பெர்சத்து கட்சியின் இளைஞர் அணித் தலைவர் Ahmad Faizal (அமாட் ஃபைஸால்) வலியுறுத்தியுள்ளார்.
நேற்று பெர்சத்துவின் இளைஞர் அணியின் பேரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த 1எம்டிபி வழக்கில் சூத்ரதாரியான நஜிப் ரசாக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆனால், முஹிடின் அம்மாதிரியான குற்றம் எதனையும் புரியவில்லை. பெர்சத்து-பாஸ் கூட்டணி இமாலய வெற்றியை அடைவதைத் தடுக்க, பழி வாங்கும் நடவடிக்கையாக முஹிடின் மீது ஒற்றுமை அரசாங்கம் இட்டுக்கட்டிய வழக்குகளை நடத்துவதாக அமாட் ஃபைஸால் குற்றம் சாட்டினார்.



