
கொரோனோ நோய்த் தொற்றால் பதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு உதவ மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கி இருக்கும் உதவித் திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து மற்றும் சுவாச கருவிகள் வாங்குவதற்கு வெளிநாட்டு தமிழர்கள் உதவவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து மஇகா இந்த உதவியை செய்து வருகிறது.
மலேசிய தனவசிய சங்கத்தின் பொறுப்பாளர்கள் இன்று இந்த உதவித் திட்டத்திற்கு 61,000 வெள்ளி காசோலையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். சரவணிடம் நேரில் வழங்கி தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த உதவித் திட்டத்திற்கு மக்கள் வழங்கி கொண்டிருக்கும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மேலும், மனிதநேய அடிப்படையில் தமிழக மக்களுக்கு உதவும் இந்த உதவித் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.



