25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அந்நியத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுங்கள்!

🔥 Views : 11
👁 Reading Now : 37

நாட்டிலுள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா கேட்டுக் கொண்டார்.
இவர்கள் மூலம் மலேசியர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தங்கி இருக்கும் ஆவணங்கள் இல்லாத அந்நியப் பிரஜைகள் கைது செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
அப்படிப் பார்த்தால் எவ்வளவு பேரை கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார் .
இதன் மூலம்
சிறைச்சாலைகளில் புதிய நோய்த்தொற்று திரள் உருவாகலாம் என்று அவர் கூறினார்.
அந்நியத் தொழிலாளர்கள் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என சிவராசா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles