
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் சர்வாதிகாரி போல ஆட்சியை நடத்துவதாகவும் ஆட்சியை விமர்சிக்கவும் கருத்துகளைக் கூறவும் மறைமுக இடைஞ்சல்களை ஏற்படுத்துவதாக துன் மகாதீர் கடுமையான விமர்சனங்களைக் கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட இம்மாதிரியான அராஜகம் நடக்கவில்லை என்றும் தாம் கலந்து கொள்வதாக இருந்த மலாய்க்காரர் உரிமையைப் பலப்படுத்தும் கூட்டம் இருமுறை தடுக்கப்பட்டதில் அன்வாரின் பங்கு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியாக பக்காத்தான் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தியதை அவர் மறந்து விட்டதாகவும் மகாதீர் நினைவுறுத்தினார்.
மலாய்க்காரர் ஒருவர் பிரதமராக இருக்கும் நிலையில் மலாய்க்காரர்களின் குரல்வலையை நெருக்குவது ஏன் என்றும் அரசு பல்லினங்களையும் சரி சமமாக ஆதரிக்கும் நிலையில், மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுவதாகவும் அதுவும் கூட ஒரு வகை இன துவேஷமே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.



