28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

‘மிஸ்டர் ஐஎஸ்ஏ’ அன்வாரை சர்வாதிகாரி
என்று அழைக்கலாமா?

🔥 Views : 4
👁 Reading Now : 66

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஒரு சர்வாதிகாரியாக துன் மகாதீர் விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக சிறையில் இருக்கும் நஜிப் ரசாக் கேலி செய்துள்ளார்.
‘மிஸ்டர் ஐஎஸ்ஏ’ என்று அழைக்கப்பட்ட மகாதீர், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எதிரிகளைப் பந்தாடியது மறந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.
பாக்காத்தான் ஆட்சியில் அவர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், தம்மீது போலீசாரை ஏவி விட்டு, வீட்டை சோதனையிட்டு, தாம் வீட்டிலிருந்து வெளியேறாமல் தடுத்து, வெளிநாட்டுக்குச் செல்ல முடியாமல் செய்து அவமானப் படுத்தியதாக நஜிப் சுட்டிக்காட்டினார்
­­­மேலும், தமக்கு ஏதுவாக தலைமை நீதிபதியை நியமித்து வெறியாட்டம் ஆடியது யாவும் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் இப்படி செய்தவர் அன்வாரை சர்வாதிகாரியாகக் குறிப்பிடுவதில் நியாயம் எதுவும் இல்லையென்றும் நஜிப் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles