
🔊To listen to this news in Tamil, Please select the text.
அந்நியத் தொழிலாளர் வருகையினால் இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டின் முட்டை உற்பத்தி சீரடையும் என்று விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ Mohamad Sabu (முகமட் சாபு) தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தி தன்னிறைவு அடைந்தால் வெளிநாட்டிலிருந்து முட்டை இறக்குமதி நிறுத்தப்படுவதோடு, மலேசியா மற்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியைச் செய்யவும் முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தோனேசியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முட்டை உற்பத்தி அதிகரிப்பதை அறிந்து வர, அமைச்சின் அதிகாரிகள் அங்கு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார்.



