
🔊To listen to this news in Tamil, Please select the text.
அடுத்தாண்டு பள்ளித் தவணை ஒரு வாரம் முன்னதாகத் தொடங்கும் என பள்ளிக் கல்வி தலைமை இயக்குநர் Pkharuddin Ghazali (கைருடின் கஸாலி) தெரிவித்தார்.
பள்ளித் தவணை ஜனவரி மாதமே தொடங்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கருத்துரைத்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு வாரம் முன்னதாகப் பள்ளி தொடங்குவதற்கு சில விடுமுறைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாக 50 ஆயிரம் மடிக் கணினிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜொகூர், கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் நேற்று தொடங்கிய முதல் பள்ளித் தவணையில் 10 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.



