32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன்

🔥 Views : 3
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிகேஆரின் சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கம் 5 ஆண்டு தவணையைப் பூர்த்தி செய்யும், தம்மை யாரும் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது, யாரைக் கண்டும் அச்சப்படும் நபர் தாம் அல்லவென்றும் குறிபிட்டார்.
தம்மைக் கடுமையாக, மரியாதை குறைவாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சியினருக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்ததோடு, நாட்டில் இன, சமய துவேஷ உணர்வைத் தூண்டுவோர் மீதான கடுமையான நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த 4 மாதங்களாக மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்த தாம். இனிமேலும் அப்படி நடந்து கொள்ளப்போவது இல்லை என்றும் தம்மைக் தரக்குறைவாக மட்டரகமாக ஆதாரமின்றி விமர்சிப்போருக்குப் பதிலடி காத்திருப்பதாக எச்சரித்தார்.
இந்த நாடு மலாய்க்காரர் மட்டுமல்லாது இங்கு வசிக்கும் எல்லா இன மக்களுக்கும் சொந்தம் என்றும் இந்த நிலைப்பாட்டைக் கெடுக்க நினைத்தால் தண்டனை நிச்சயம் என்றும் அவர் தெரிவித்தார்.
மலாக்காரார்களுக்கு உதவும் போர்வையில் கோடிக் கணக்கான அரசின் பணத்தைக் கொள்ளையடித்து, தங்களின் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் தண்டனைக்குப் பயந்து மலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடுவதாக மார் தட்டுகின்றனர்.
அரசின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் கடும் தண்டனைக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அன்வார் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles