
🔊To listen to this news in Tamil, Please select the text.
அந்நியத் தொழிலாளர் வேலை வாய்ப்பில் தளர்வும் கோட்டா முறையிலான தளர்வு நடவடிக்கையும் கால வரையறையின்றி தடை விதிக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் அறிவித்தார்.
இதற்கு முன்னர் கோட்டா முறையில் தொழிலாளர் தருவிப்பைச் செய்ய ஏதுவாக முதலாளிகள் துரித நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கொடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட அனுமதிகளின் மூலம் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 5 துறைகளில் 5 லட்சத்து 90 ஆயிரம் பேரைக் கொண்டுவர அரசு அனுமதி அளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.



