31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சவூதி பட்டத்திளவரசரை சந்திக்காமல் திரும்பிய அன்வார் விளக்கமளிக்க வேண்டும்

🔥 Views : 9
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

சவூதி அரேபியா பட்டத்திளவரசரும் பிரதமருமான Mohammed bin Salman (முகமட் பின் சல்மானின்) அழைப்பின் பேரில் அந்நாட்டுக்குச் சென்று, அவரைச் சந்திக்க முடியாமல் நாடு திரும்பிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், அது பற்றிய முழு விவரத்தை நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டுமென பெரிக்காத்தான் மாச்சாங் எம்பி Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal (வான் அமாட் ஃபைசால் வான் அமாட் கமால்) வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னர், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரோடு அங்கு சென்ற அன்வாருக்கு முறையான மரியாதை தரப்படவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட அரசின் விருந்துபசரிப்பில் முகமட் பின் சல்மான் கலந்து கொள்ளவில்லை. மேலும் அன்வார் அவரைச் சந்திக்க முடியாமல் நாடு திரும்புள்ளது நாட்டிற்குப் பெருத்த மரியாதை குறைவு என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தப் பயணத்திற்கு பெரிய செலவு ஏற்பட்டுள்ளதாலும் நாட்டிற்குப் பெரும் அவப்பெயர் என்பதாலும், அந்தப் பயணத்தில் என்ன நடந்தது, எவ்வளவு செலவானது, பயணத்தில் கலந்து கொண்டோரின் விவரம் போன்றவற்றை அன்வார் மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டுமென வான் அமாட் ஃபைசால் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles