31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டாக்டர் ராமசாமியை அகற்ற திட்டம் எதுவுமில்லை

🔥 Views : 6
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி வரும் மாநிலத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க ஜசெக நெருக்குதல் கொடுத்து வருவதாகப் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அதன் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
சிலாங்கூர் ஜசெக பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஜசெக எந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதும் அதற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதும் இன்னமும் முடிவாகவில்லை என்பதால், பினாங்கு மாநிலத் தேர்தலில் டாக்டர் ராமசாமி போட்டியிடாமல் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்பதால், கட்சியில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles