26.8 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

காராக்கில் தடுப்பூசி மையம்! காமாட்சி வரவேற்பு

🔥 Views : 46
👁 Reading Now : 69

காராக் மற்றும் சபாய் வட்டார மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் காராக்கில் தடுப்பூசி மையம் அமைக்கப் பட்டிருப்பதை சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் வரவேற்றார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
இன்று தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்த அவர் தனது சார்பில் கிருமிநாசினியும் முகக்கவசங்களையும் அன்பளிப்பு செய்தார். இதுவரை நான்காயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மைசெஜத்ரா முலம் பதிவு செய்து கொண்டுள்ளனர். பெலாங்காய் என்ற இடத்தைச் சேர்ந்த 3,700 பேர் இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள 50 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வர வேண்டும் என்று தம்மிடம் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles