
🔊To listen to this news in Tamil, Please select the text.
கம்போடியாவுக்கான தமது ஒரு நாள் அதிகாரப்பூர்வ வருகையின்போது இருவழி நட்புறவு, வட்டாரம் மற்றும் அனைத்துலக விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் Hun Sen – னுடன் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருப்தியடைந்துள்ளார். கம்போடிய பிரதமரின் அழைப்பை தாம் பெரிதும் மதித்தாக தமது வருகையின் முடிவில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். 66 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே இருந்துவரும் ஒத்துழைப்பும் வலுவடைந்துள்ளதாக அன்வார் கூறினார். இதனிடையே மியன்மார் நெருக்கடி குறித்து Hun Sen எழுப்பிய விவகாரம் தொடர்பில் ஆசியான் நிலையில் விவாதிப்பதே மேலும் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



