
🔊To listen to this news in Tamil, Please select the text.
6 மாநிலத் தேர்தல்கள் விரைவில் வரவிருப்பதால் தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு சிக்கலாகி வருவதாக மசீசவின் தலைவர் வீ கா சியோங் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், தேசிய முன்னணியில் மசீசவும் மஇகாவும் இணைந்திருந்ததால், கேட்ட தொகுதிகள் சிக்கலின்றி முடிவாகின. ஆனால், தற்போது தேசிய முன்னணியில் இணைந்திருக்கும் கட்சிகள் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரச்சினைகள் பேசித் தீர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இதில் பொறுமையும் விட்டுக் கொடுக்கும் போக்கும் அவசியமென அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிகளுக்குள் ஒருமித்த உடன்பாடு அடுத்த மாத இறுதிக்குள் எட்டப்படும் என வீ கா சியோங் குறிப்பிட்டார்.



