
🔊To listen to this news in Tamil, Please select the text.
1எம்டிபி நிதியிலிருந்து கோடிக் கணக்கான பணத்தைக் களவாடிய கோல்ட்மேன் சாச்சின் மேல்மட்ட அதிகாரி ரோஜர் இங்கிடமிருந்து 35.1 மில்லியன் டாலரை(155.2 மில்லியன் ரிங்கிட்) பறிமுதல் செய்ய வேண்டுமென அமெரிக்கா, புரூக்லின் நீதிமன்றம் மார்ச் 9ஆம் தேதி உத்தரவிட்டது.
உலகில் பெரிய நிதி மோசடியாக வர்ணிக்கப்படும் 1எம்டிபி திவாலகும் நிலைக்குத் தள்ளிய நிதி மோசடியில், முக்கிய நபராகத் திகழ்ந்த ரோஜர் இங்கிற்கு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்ததோடு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அந்த நீதிமன்றம் விதித்தது.
இதில், ரோஜர் இங்கின் மேலதிகாரியான டிம் லீஸ்னர் மீது பின்னர் தண்டனை விதிக்கப்படும். இந்த மோசடிக்குத் சூத்ரதாரியாக இருந்த ஜோ லோ இன்னமும் வழக்கைச் சந்திக்காமல் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



