
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் மற்றவர்களின் மை கார்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, நாட்டிற்குள் நுழைந்த 6 பிலிப்பினோக்களுக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
5 பேருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையோடு தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 12 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் Ayuni Izzaty Sulaiman (அயுனி இஸ்ஸாத்தி சுலைமான்) உத்தரவிட்டார்.
அவர்களோடு பிடிபட்ட 15 வயது சிறுமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்த பின்னர், அவர்கள் அனைவரையும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமென அயுனி உத்தரவிட்டார்.



