34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பிற சமயங்களை இழிவு படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை இல்லையே, ஏன்?

🔥 Views : 6
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிற மதங்களை இழிவு படுத்துவோர் மீது அமலாக்கத் தரப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இது நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதி ராவ் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை இழிவு படுத்துவோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை விதிக்கும் சுறு சுறுப்பு மற்ற மதங்களைத் துவேசித்து, இழிவு படுத்தி, சிறுமை படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலை நீதித் துறையின் பாகுபாடான, இரட்டைப் போக்கு என கணபதி ராவ் விமர்சித்தார்.
பொதுமக்கள் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தாலும், அவையும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அரசமைப்பு விதி எல்லா இன மக்களுக்கும் பாகுபாடில்லாத நடவடிக்கையை வலியுறுத்தும் போது, அமலாக்கத் துறையின் பாராமுகம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles