27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்படுவர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

2023லிருந்து 2027ஆம் ஆண்டுக்களுக்கான 5 ஆண்டு காலத்திற்குத் தேவையான 20 ஆயிரம் ஆசிரியர்கள் கல்வியமைச்சில் சேர்க்கப்படுவர் என துணை கல்வியமைச்சர் Lim Hui Ying (லிம் ஹுய் யிங்) மக்களவையில் தெரிவித்தார்.
2021லிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை பாட வாரியாக 148 வட்டாரங்களுக்கு மொத்தம் 22,327 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதிய நியமனங்கள் யாவும் ஆங்கிலம், மலாய், இஸ்லாமிய பாடம், கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாட போதனைகளுக்கு ஆனதாகும்.
அவர் மேலும் கூறும்போது, பழுதான 80 விழுக்காடு பள்ளிகள் சபா, சரவாக்கில் உள்ளதாகவும் அவற்றைப் புதுப்பிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles