
🔊To listen to this news in Tamil, Please select the text.
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயோப் கானின் பதவி நியமனம் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டதோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.
விரைவில் கட்டாய ஓய்வு பெறவிருக்கும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசானுக்கு பதிலாக ஆயோப் கான் அப்பொறுப்பை ஏற்பதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.



