26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அடுத்தாண்டு ஜனவரியில் புதிய பள்ளித் தவணை- கல்வியமைச்சு கொள்கையளவில் இணக்கம்

🔥 Views : 5
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

பல்வேறு தரப்பினரிடமிருந்து குறிப்பாக பெற்றோர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றப் பின்னர் பள்ளித் தவணையை மறுபடியும் ஜனவரி மாதத்திற்கு மாற்ற கல்வியமைச்சு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
எனினும், 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்திற்கேற்ப பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதால் இதன் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க இயலாது என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார். அனைத்துப் பாடங்களும் அட்டவணைக்கேற்ப முடிக்கப்பட வேண்டும். அது தவிர எஸ்.பி.எம். போன்ற முதன்மைத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், பள்ளித் தவணையை ஜனவரிக்கு மாற்றுவதற்கு முன்னர் நிச்சயமற்ற வானிலை மற்றும் வட்டார பொருளாதார நிலை போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles