
🔊To listen to this news in Tamil, Please select the text.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருக்கும் ரஹ்மா ரமலான் நோன்பு துறப்பு நிகழ்வின் போது முக்கிய உரை நிகழ்த்துவார்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் மாலை 5.30 மணி தொடங்கி நடைபெறும் இந்த விஷேச நிகழ்வில் மந்திரி பெசார் அரசு ஊழியர்களுடன் இணைந்து நோன்பு துறப்பார்.
இந்த நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், மாநில நிதி அதிகாரி டாக்டர் அகமது ஃபாட்சில் அகமது தாஜூடின் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.
இந்த நிகழ்வை பொது மக்கள் பேஸ்புக் சிலாங்கூர் மீடியா, யூடியூப் சிலாங்கூர் டிவி வாயிலாக கண்டு களிக்கலாம்



