25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் மரணம்- பொந்தியானில் சம்பவம்

🔥 Views : 7
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

இரு கார்கள் நேருக்கு நேர் மோதியச் சம்பவத்தில் மூவர் பரிதாபமாக மாண்டனர். இக்கோரச் சம்பவம் இங்குள்ள ஜாலான் பாரிட்ட குடுஸ் 5.7 கிலோ மீட்டரில் பாரிட் குடுஸ் தேசியப் பள்ளிக்கு எதிரே நிகழ்ந்தது.
மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஷோபி தாயிப் கூறினார்.
எனினும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் தொடர்பில் விசாரணை அதிகாரி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles