32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

3 நீதிபதிகள் மறுத்த பின்னரே, நஜிப்பின் வழக்கு நீதிபதி நஸ்லானிடம் ஒப்படைக்கப்பட்டதா?

🔥 Views : 5
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

3 நீதிபதிகள் எஸ்ஆர்சி வழக்கை விசாரணை செய்ய மறுத்த பின்னரே, அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி Nazlan Ghazali (நஸ்லான் கஸாலி)யிடம் வழங்கப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி நஸ்லான் மீது புகார் கூறப்பட்டதை அடுத்து, ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் வெளிப்பட்டு, சிவில் வழக்குகளை விசாரித்து வந்துள்ள நஸ்லானிடம் இந்தக் கிரிமினல் குற்ற வழக்கு வழங்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு முன்னர் நீதிபதி நஸ்லான், மே பேங்கின் செயலாளராகவும் அதன் தலைமை வழக்கறிஞராகவும் செயலாற்றியபோது, புத்ரா பெர்டானா நிறுவனம் பெற்ற 14 கோடி ரிங்கிட், 1எம்டிபி எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 417 கோடி ரிங்கிட் கடன் பற்றியும் முழுமையாகத் தெரிந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை மறைத்து அவர் நஜிப்பின் வழக்கை விசாரித்து, தண்டனை வழங்கியது நெறிமுறைக்கு மாறான செயலென்றும் கூறப்படுகிறது.
அதனை தலைமை நீதிபதிக்கு அறிவிக்காமல் நஜிப்பின் வழக்கை விசாரணை செய்தது நேர்மையற்ற செயல் என்றும் இந்த விவரத்தை வெளியிட்டுள்ள Lim Sian See (லிம் சியான் சீ) எனும் நபர் Sabahkini (சபாகினி) எனும் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles