
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்றும் அவர்களின் சேவை மதிக்கப்பட வேண்டுமென்றுm அரசு கருதுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இன்றிலிருந்து 5ஆம் தேதி வரை தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் ஏற்ற வகையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினையைத் தீர்க்க பரிந்துரை ஒன்று பிரதமர் அன்வாரிடன் தாக்கல் செய்யப்படும் என்றும் ஒப்பந்த மருத்துவர்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென பாசிர் கூடாங் எம்பி Hassan Abdul Karim (ஹசான் அப்துல் கரிம்) கேட்டுக் கொண்டார்.



