
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஏப்ரல் 3லிருந்து 5 ஆம் தேதி வரை ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டி இருப்பதை சுகாதார அமைச்சு கடுமையாகக் கருதுவதாகவும் அம்மாதிரியான சட்டவிரோத நடவடிக்கையில் இறங்குவோர், ஆதரவளிப்போரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
2011ஆம் ஆண்டு பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கையின் படி, பணி நேரத்தின் போதோ, பணி நேரத்திற்கு அப்பாற்பட்டும், வேலை நேரத்தின்போது இடையேயும் அதில் கலந்து கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், வேலை நிறுத்தத்திற்கான அரசின் உபகரணங்களைக் கொண்டு தயாரிப்பு வேலைகளைச் செய்வதுவும் குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட குற்றங்களை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பின் அதில் சம்பந்தப்- பட்டோரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்ச்சித்த ஊடகப் பயனர்கள், ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கையைப் பரிவுடன் அணுகுவதை விடுத்து அவர்களின் கருத்துரிமையை அரசு பறிப்பது அராஜகம் என்றும் விமர்சித்துள்ளனர்.



