
🔊To listen to this news in Tamil, Please select the text.
உலக செல்வந்தர்களைப் பட்டியலிட்டுள்ள ‘ஃபோர்ப்ஸ்’ அறிக்கையில் 18 மலேசியர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக், டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், குவேக் லெங் ச்சான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
2023 உலகப் பணக்காரர் வரிசையில் இணைந்துள்ள 18 மலேசியர்களின் மொத்த சொத்தின் மதிப்பு 54.7 பில்லியன் டாலர் அல்லது 240.38 பில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும்.
இதில், 11.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தைக் கொண்டிருக்கும் ரோபர்ட் குவோக், மலேசியப் பணக்காரர்களில் முதலிடத்தையும் உலக வரிசையில் 146-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். மலேசியாவில் இவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளவரும் மலேசியாவின் 4-ஆவது நிதி நிறுவனமான ஹொங் லியோங் வங்கியில் அதிகப் பங்குகளைக் கொண்டிருப்பவருமான குவேக் லெங், 10.1 பில்லியன் டாலர் சொத்துடன் 179-ஆவது இடத்தையும் 5.2 பில்லியன் டாலர் சொத்தைக் கொண்டுள்ள ஆனந்த கிருஷ்ணன் உலக வரிசையில் 511-ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர்.



