
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெண்கள் அரசியலுக்கு வந்தால், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்மை விளையும் என்ற எதிர்பார்ப்பு, பொதுவாக அரசியல் வட்டத்தில் நிலவுகிறது. ஆனால், ஸுரைடா கமாருடின் போன்றவர்களால் மக்களுக்கும் நன்மை இல்லை; நாட்டிற்கும் பயனில்லை.
அம்பாங் தொகுதியில் இருந்து 3 முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பிகேஆர் கட்சிக்கும் நம்பி வாக்களித்த மக்களுக்கும் பச்சை துரோகம் இழைத்துவிட்டு, 2020 ஷெரட்டன் நகர்வுக்கு துணைபோனதுடன் கட்சி மாறி பெர்சத்து கட்சியில் அவர் சேர்ந்தார்.
பின் அதிலிருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியா-கட்சியில் சேர்ந்தார்; அங்கிருந்தும் இவர் வெளியேற்றப்பட்டதால் தனி மரமான அவர், அதே அம்பாங் தொகுதியில் கடந்து 15-ஆவது பொதுத் தேர்தலின்போது சாலையோரத்தின் தனியாக நின்று வாக்கு கேட்டு, கடைசியில் வைப்புத் தொகையையே இழந்தார். இப்பொழுது, மீண்டும் பெர்சத்து கட்சியில் சேர விரும்பிய நிலையில், இவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்பொழுது ஏறக்குறைய அரசியல் அனாதை என்னும் நிலைக்கு ஆளாகி நிற்கிறார் இந்த தவளை அரசியல்வாதி. துரோக அத்தியாயம் புரிந்து, விதைத்த வினையை இப்பொழுது அறுவடை செய்கிறார் ஸுரைடா.



