
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுமக்களின் சுமையைக் குறைக்க ரஹ்மா உணவுத் திட்டம் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அது மேலும் சிறக்க உணவு விநியோகிப்பாளர்களுக்கு உதவும் வகையில், ஊக்குவிப்பு மானியம் வழங்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் Salahuddin Ayub (சலாஹுடின் அயூப்) தெரிவித்தார்.
நாடு முழுமையிலும் இத்திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டோரிடையே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அவர்கள் வழங்கும் உணவின் தரத்தைப் பரிசோதித்து ஊக்குவிப்புச் சலுகை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதோடு, பி40 குடும்பங்களுக்கு உணவுக் கூடைத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதுவரை 1,148 ரஹ்மா சந்தை வர்த்தகர்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தில் பங்கெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
