26.4 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

இன்று வந்து நாளை போகும் தலைவர்களுக்கு சொந்தமானது அல்ல, அம்னோ

🔥 Views : 8
👁 Reading Now : 67

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த அரசியல் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அம்னோ-வில் இனியும் பிரிவினையும் பிணக்கும் தொடர்ந்தால், இந்தப் பாரம்பரியக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விடும் என்று அம்னோ-வின் புதிய உதவித் தலைவர் ஜோஹாரி கனி தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்தக் கட்சி 35 இலட்சம் உறுப்பினர்களுக்குச் சொந்தமானதேத் தவிர, இன்று வந்து நாளை போகும் தலைவர்களுக்கு சொந்தமானது அல்ல;

எனவே, உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தங்களுக்கு இடையில் பிரினையை இனியும் தொடர்ந்தால், அம்னோவின் அரணாக இருக்கும் தொண்டர்களும் உறுப்பினர்களும் சோர்ந்து போவார்கள். வலிமையான கட்சியாக இருந்தும் சிறிய கட்சிகளிடம் அம்னோ தொல்வி அடைந்ததை எல்லாம் தலைவர்கள் எண்ணிப்பார்த்து, அதற்கேற்ப அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் புதிய உதவித் தலைவர்களில் ஒருவராக தேர்வு பெற்றுள்ள ஜோஹாரி கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles