27.5 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்புக்கான அனுமதி ரத்து: நாட்டின் உற்பத்தியைப் பாதிக்கும்

🔥 Views : 8
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் அனுமதியை மார்ச் 18ஆம் தேதியிலிருந்து அமலுக்குக் கொண்டுவந்த முடிவானது தொழில்துறையைப் பெரிதும் பாதிக்கும் என மலேசிய உற்பத்தியாளர் சங்கங்களின் சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த அனுமதி ரத்தானதால் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட உற்பத்திக்கான அழைப்பாணைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் Soh Thian Lai (சோ தியான் லாய்) தெரிவித்தார்.
தொழிலாளர் தருவிப்புக்கான விதிமுறையை அடிக்கடி அரசு மாற்றி சிரமத்தை ஏற்படுத்துவதோடு இறுதியாக தருவிப்பை முற்றாக நிறுத்தியுள்ளது தொழில்துறையைச் நசிக்கச் செய்துவிடும் என தமது கவலையைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட 995,396 பேருக்கான கோட்டைவை நிறுவனங்கள் பூர்த்தி செய்யும் வரை புதிய தொழிலாளர் தருவிப்புக்கான அனுமதியை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் அறிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles