
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கில் தாங்கள் வெற்றி பெற்ற எந்தத் தொகுதியையும் பக்காத்தான் ஹராப்பான் விட்டுக் கொடுக்காது என்றும் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் டக்டர் Nor Lela Arifin (நோர் லேலா அரிஃபின்) தெரிவித்தார்.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள செபராங் ஜெயா, பாசிர் பெனாந்தி தொகுதிகளில் ஒன்றை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென பெர்மாத்தாங் பாவ் அம்னோ தலைவர் Zaidi Said (ஜைடி சைட்) கோரிக்கை விடுத்திருந்தார். தங்களுக்கு கூடுதல் தொகுதி கிடைத்தால் அது பக்காத்தான் ஆட்சிக்குப் கூடுதல் பலமென்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பொதுத்தேர்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் வென்ற கட்சிக்கே அந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பக்காத்தான் தலைமைத்துவத்தின் முடிவின்படி எந்தத் தொகுதியையும் அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று நோர் லேலா அரிஃபின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
