
🔊To listen to this news in Tamil, Please select the text.
1976ஆம் ஆண்டு சபாவில் நிகழ்ந்த டபல் சிக்ஸ் விமான விபத்தில் அப்போதையை சபா முதலமைச்சர் Fuad Steephens (ஃபுவாட் ஸ்டீபன்ஸும்) 10 பேரும் மரணமடைந்தனர்.
அதன் விசாரணை அறிக்கை இத்தனை காலமும் அதிகாரப்பர்வ ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டும் நேற்று முன்தினம் பொது- மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் படி அந்த விமான விபத்தில் சதிநாச வேலை எதுவும் இல்லையென்றும் சம்பந்தப்பட்ட விமானம் லாபுவானில் இருந்து பிற்பகல் 3.09 மணிக்குப் புறப்பட்டபோது அதன் இயந்திரங்கள் நல்ல நிலையில் இருந்ததாகவும் முறைப்படி பராமரிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்- பட்டுள்ளது.
அந்த விமானத்தை இயக்கிய விமானி Gandhi J Nathan (காந்தி ஜே நாதன்) தமது சேவையில் சிறந்த அடைவு நிலையை அடையாது, சம்பவ தினத்தின்போது போது ஓய்வு, தூக்கம் இல்லாமல் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உரிமையாளர் நிறுவனம் விமான விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனயீனமாக நடந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த விபத்தானது ஃபுவாட் ஸ்டீபன்ஸ் முதலமைச்சராகப் பதவியேற்று 53ஆவது நாளில் நிகழ்ந்தது பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
