29.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நஜிப்பிற்கான மன்னிப்புக் கோரிக்கை பேரரசரின் பரிசீலனையில் உள்ளது

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான அரச மன்னிப்பு கோரிக்கை தற்போது பேரரசரின் பரிசீலனையில் உள்ளதாகவும், பேரரசர் அதனைப் பரிசீலித்து தகுந்த முடிவை எடுப்பார் என சட்டம், நிறுவன சீரமைப்புத் துறை அமைச்சர் Azalina Osman (அஸாலினா ஒஸ்மான்) தெரிவித்தார்.
இறுதி முடிவை பேரரசரே முடிவெடுக்க வேண்டும் என்பதால் அதனைச் செய்ய யாரும் அவருக்கு நெருக்குல் தர உரிமையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நஜிப்பிற்கான மன்னிப்புப் கோரிக்கையை அம்னோ செய்ய முடியாது என்றும் 2000ஆம் ஆண்டு சிறைத் துறையின் விதிமுறை 113இன் கீழ், அதனைச் செய்ய சம்பந்தப்பட்ட நஜிப் அல்லது அவரது குடும்பத்தார் மட்டுமே உரிமை பெற்றிருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Wan Junaidi Tuangku Jafaar (வான் ஜுனைடி துவாங்கு ஜாபார்) தெரிவித்தார்.
கோரிக்கையை அவர் சார்ந்த கட்சியோ அல்லது அவரின் வழக்கறிஞரோ மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எஸ்ஆர்சி வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனையைத் காஜாங் சிறையில் தொடங்கிய அவர், 2022 செப்டம்பர் 2ஆம் தேதியே மன்னிப்புக்கான கோரிக்கையை பேரரசருக்கு அனுப்பியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles