
🔊To listen to this news in Tamil, Please select the text.
MIMS எனப்படும் பன்னாட்டு மருத்துவ சேவை வழங்கும் நிறுவனத்தின் நிர்வாகியாகவும் வட்டார உதவித் தலைவராகவும் பதவி வகித்த Cliford Lawrence Patrick (கிளிஃபர்ட் லோரன்ஸ் பேட்ரிக்கை) சட்ட விரோதாமாகப் பதவி நீக்கம் செய்தமைக்காக அவருக்கு அந்நிறுவனம் 2 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென தொழிலியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த நிறுவனத்தில் 19 ஆண்டு காலம் பதவியில் இருந்த அவரை 2019 ஜூன 10 ஆம் தேதி, அடைவுநிலை திருப்திகரமாக இல்லாத காரணத்திற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த தொழிலியல் நீதிமன்ற தலைவர் Syed Noh Said Nazir @ Syed Nadzir (சைட் நோ சைட் நஸ்ரி @ சைட் நாட்ஸிர்) அவரின் அடைவு நிலை சரிந்ததாக நிறுவனம் கணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டர்.
அவரின் பதவிக் காலத்தில் 5 முறை பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காததாலும், அவரைப் பதவியில் இருந்து நிறுத்தியது சட்ட விரோதம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
எனவே, அவருக்கு இழப்பீடாக 949,698 ரிங்கிட்டும் சம்பள பாக்கியாக 1.06 மில்லியன் ரிங்கிட்டையும் வழங்க வேண்டுமென தொழிலியல் நீதிமன்றத் தலைவர் Said Noh (சைட் நோ) உத்தரவிட்டார்.
