
🔊To listen to this news in Tamil, Please select the text.
ளைஞர்களின் மரணத்திற்குக் காரணமான பெண் குமாஸ்தா Sam Ke Ting (சேம் தீ கிங்) கின் 6 ஆண்டு சிறைத் தண்டனையை மேல் முறையீட்டு நிதிமன்றம் நேற்று ரத்து செய்து அவரை விடுவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் அவ்வழக்கை விசாரித்த ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தையும் விதித்திருந்தது.
பசிக்கால் லாஜாக்(Basikal Lajak) எனும் மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள் சவாரியில் பல இளைஞர்கள் ஈடுபட்டபோது, இரவில் மேடான, வளைவுமிக்க சாலையில் அவர்களை மோதித் தள்ளிய விபத்தில் 8 இளைஞர்கள் பலியாயினர்.
விடுதலையான சேம் கீ திங், 8 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த தாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்



