
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒரு பள்ளியின் வகுப்பறையை நிர்மாணிக்க கல்வியமைச்சு 1.8லிருந்து 2.6 மில்லியன் ரிங்கிட் வரை செலவிடுவது பல சந்தேகங்களை எழுப்புவதாக பூச்சோங் எம்பி Yeo Bee Yin (யியோ பீ யின்) அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் Fadhlina Sidek (ஃபட்லினா சீடேக்), வகுப்பறைகளை நிர்மாணிக்க அரசின் வழக்க நடைமுறை, விதிமுறையைப் பின்பற்றியே கல்வியமைச்சு அதனை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
கட்டுமான நடைமுறையில் வேலையின் நிபந்தனை, கட்டுமானம் மற்றும் வேலைக்கான தரம் போன்றவை பின்பற்றப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சு பள்ளிக் கட்டட நிர்மாணிப்பில் முறைகேடு எதனையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
