
🔊To listen to this news in Tamil, Please select the text.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.
இந்த விடுமுறையானது கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல தரப்பினர் இந்த விடுமுறைக்கான அவசியத்தை குறிப்பிட்டு முறையிட்டதன் அடிப்படையில் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகள் பெருநாள் ஏற்பாடுகளைச் செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளுக்கான விடுமுறை ஏப்ரல் 22ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தாலும் அரபு சிற்றரசின் அனைத்துலக வானியல் மையத்தின் கணிப்பின் படி நோன்புப் பெருநாளின் முதல்நாள் ஏப்ரல் 21ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.
