28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

புற்று நோய் கணட மூதாட்டியின் அடையாளக் கார்டை பறிமுதல் செய்தது சட்ட விரோதம்

🔥 Views : 8
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஏப்ரல் 9ஆம் தேதி லீனா எனும் 65 வயது சரவாக்கிய மூதாட்டி 15ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் தமது முகவரியை மாற்ற விண்ணப்பித்தபோது, அவரின் அடையாளக் கார்டை சரவாக், லாவாஸ் தேசிய பதிவிலாகா பறிமுதல் செய்துள்ளது.
அந்த மாது புற்றுநோய் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவிலாகாவின் அடையாளக் கார்டை பறிமுதல் செய்தது சரியே என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தற்காத்துப் பேசிய பின்னர் பல தரப்பனரும் அதனைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மூதாட்டி ஒரு இந்தோனேசியர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் இயக்கத்தின் இயக்குநர் Zaid Malek (ஸைட் மாலேக்) அதனைக் கடுமையாக விமர்சித்து பதிவிலாகாவின் செய்கையானது மனிதாபிமானமற்றது, அதிகாரத் துஷ்பிரயோகம், அரசமைப்பு விதிகளுக்கு முரணானது என்றும் சாடியுள்ளார்.
மூதாட்டியின் அடையாளக் கார்டை பறிமுதல் செய்ததன் வழி, அவருக்கு அரசின் இலவச சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்- பதாக மாலேக் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles