
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் 7 வட்டாரங்களில் வெப்ப நிலைமை 35 லிருந்து 37 பாகை செல்சியஸாக உயர்ந்துள்ளதை அடுத்து, மலேசிய வானிலை ஆய்வு மையம் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்த வட்டாரங்கள் கோல திரெங்கானு, கிளந்தானில் உள்ள ஜெலி, கோல கிராய், பாசிர் மாஸ், தானா மேரா, பகாங்கில் உள்ள ரோம்பின், நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் ஆகியவையே அவைகளாகும்.
வெப்பம் புகை மூட்டத்திற்குக் காரணமாக இருப்பதால், மக்கள் மிகுந்த விழிப்பாக இருப்பதோடு நாளொன்றுக்கு குறைந்தது 8 கிளாஸ் நீரை அருந்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெப்பமானது ஒருவருக்கு அயற்சியையும் உடலில் இருக்கும் நீர்த் தன்மையைக் குறைக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது.
