28 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

சிலாங்கூரில் கைரி போட்டியிடலாம் பாஸ் கோடி காட்டியது

🔥 Views : 10
👁 Reading Now : 25

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் அம்மாநில சட்டமன்ற தொகுதியில் அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் போட்டியிடலாம் என்பதை பாஸ் கோடி காட்டியது. எனினும் அதற்கு முன்னதாக பெர்சத்து கட்சியில் இணையும் வாய்ப்பை கைரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெர்சத்து கட்சியில் கைரி இணைந்தால் சிலாங்கூரில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியிலுள்ள சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என அந்த தலைவர் கூறியதாக உத்துசான் தகவல் வெளியிட்டது. பாஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கைரி இடம்பெறாவிடடாலும் பெர்சத்துவின் பட்டியில் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles