25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சமய விவகாரங்களை அரசியல் பிரச்சினைகளாக ஆக்காதீர்

🔥 Views : 6
👁 Reading Now : 65

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் பல இன வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு நல்லிணக்கத்தின் கூறு என்பதால் சமய விவகாரங்களைச் சர்ச்சையாக்கி அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாமென பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah (சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா) கேட்டுக் கொண்டார்.
அரசமைப்பு விதி வரையறுத்துள்ளவாறு இஸ்லாம், கூட்டரசின் அதிகாரத்துவ சமயமாகவும் சுல்தான்கள் மாநில சமயத் தலைவர்கள் என்பதையும் அனைவரும் மதிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். எனினும், மற்ற மதத்தவர்கள் தங்களின் சமயங்களை அனுசரிக்கத் தடையேதும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.
நாட்டை வளமாக்கி வெற்றி பெற்ற நாடாக உருவாக்க அனைவரும் வேற்றுமையை விட்டொழித்து, நாடும் மக்களும் நலம்பெற ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கொண்டாடப்படவிருக்கும் தமது பிறந்த நாளை ஒட்டி, நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் பேரரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles