25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பெர்சத்துவிற்கு நிதி சேர்க்கவே மகாதீருடன் ஒட்டுறவு

🔥 Views : 6
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஷெரட்டன் நகர்விற்குப் பின்னர், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் பிரதமரானதிலிருந்து அவர்களிருவருக்கும் கடும் பகை மூண்டு, ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விட்ட வண்ணமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களிருவரும் அரசியல் பகையை மறந்து மீண்டும் ஒத்துழைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஒத்துழைப்பு தொடருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒத்துழைப்பின் நோக்கத்தின் மீது கருத்துரைத்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்க்காசி, தற்போது ஊழல் வழக்கில் முஹிடின் சிக்கி இருப்பதால், பெர்சத்துவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கட்சி 6 மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள அதிகளவில் பணம் தேவைப்படுவதால், அதனை மகாதீரிடமிருந்து பெறவே, அவருடன் சேர்ந்து பணியாற்ற முஹிடின் முயற்சி செய்வதாகத் தெரிவிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles