
🔊To listen to this news in Tamil, Please select the text.
தற்போது நாட்டில் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள முஸ்லிம் அல்லாதோர் அல்லா எனும் வார்த்தையைப் பயன்படுத்துவது சம்பந்தமான விவகாரம், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாதென பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-பில்லா முஸ்தாப்பா பில்லா அமாட் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
முஸ்லிம்களின் உணர்விலும் உள்ளத்திலும் முக்கியமாகத் திகழ்ந்து வரும் அல்லா எனும் வார்த்தை சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசு விரைவான, சுமுகமான, யாரையும் நிந்திக்காத வகையிலும் தீர்வினைக் காண வேண்டுமென தமது பிறந்த நாளை முன்னிட்டு சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் உரையாற்றும்போது பேரரசர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்திற்கான தீர்வானது அரசமைப்பு விதி, ஆட்சியாளார்களின் உரிமை, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டுமென அவர் அறைகூவல் விடுத்தார்.
