26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

முன்னாள் அம்னோ தலைவர்களை உதாசீனம் செய்வதால், அம்னோ அழியும்-கைரி ஜமாலுடின் சாடல்

🔥 Views : 17
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜுன் 7இல் இருந்து 10ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அம்னோ பேராளர் மாநாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அம்னோ தலைவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் ஆனால் அவர்கள் மண்டபத்திற்கு வெளியே அமர்த்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைக் கடுமையாகச் சாடிய கைரி ஜமாலுடின், முன்னாள் தலைவர்களை தக்க மரியாதை இன்றி நடத்தினால், வரும் 6 மாநிலத் தேர்தல்களில் அம்னோ தோல்வியடைவது நிச்சயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்காகப் படுபட்ட முன்னாள் அம்னோ தலைவர்களைக் கட்சித் தலைமைத்துவம் உதாசீனம் செய்து சிறுமைப்படுத்துவதை கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட ஹிஷாமுடின் ஹுசேய்ன், கைரி ஜமாலுடின் உட்பட சிலர், 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles