25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

யுபிஎஸ்ஆர், பிடி3 ஆகிய தேர்வுகள் மீண்டும் அமல்படுத்த வாய்ப்பில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 49

🔊To listen to this news in Tamil, Please select the text.

ரத்து செய்யப்பட்ட யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 ஆகிய பள்ளித் தேர்வுகளை மீண்டும் நடத்த அரசு விரும்பவில்லை என்றும் அதற்குப் பதிலாக தற்போது நடத்தப்பட்டு வரும் பிபி எஸ் மற்றும் பிபிடி ஆகிய தேர்வுகள் தொடரும் என கல்வி துணையமைச்சர் Lim Hui Ying (லிம் ஹுய் யிங்) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பள்ளி நிலையிலான பிபிஎஸ்ஸும் வகுப்பறை நிலையிலான பிபிடி ஆகிய தேர்வும் கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்யப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான யுபிஎஸ் ஆர் தேர்வும் பிடி3 எனும் தேர்வும் 2022ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிபிஎஸ் தேர்வானது வகுப்பறை நடவடிக்கைகள், விளையாட்டுகள், புறப்பாட நடவடிக்கைகள், திறன்சார்ந்த பயிற்சிகள் போன்றவற்றை அடங்கியதாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles