34 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

அரச பரம்பரையைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அரசு அரசமைப்பு விதிகளை அணுக்கமாகப் பின்பற்றுவதோடு அரச பரம்பரையை சுய லாபத்திற்காகப் பயன்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனையை விதிக்கும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-பில்லா முஸ்தாப்பா பில்லா அமாட் ஷாவின் பிறந்த நாளின்போது அரசின் வாக்குறுதியை வாசித்த அவர், ஆட்சியாளர்கள், இஸ்லாத்தின் மாட்சிமை, சுல்தான்களின் சமயத் தலைவர் பொறுப்பு போன்றவற்றை அரசு பொன்னே போல் காக்கும் என்றும் உறுதி கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, மக்களைப் பாதிக்கும் கல்வி, சுகாதாரம், அரசு ஊழியர்களின் வீட்டு வசதி, பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய நவீன தளவாட வசதிகளைச் செய்து கொடுக்க முன்னுரிமை தரும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அனைத்துலக நிலையில் நாட்டின் இறையாண்மையைப் அரசு பாதுகாப்பதோடு உலக விவகாரங்களில் தன்னாலியன்ற பங்களிப்பை ஆற்றும் என்றும் அவர் உறுதி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles