
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஆட்சியாளர்கள் மாநாடு ஒரு முடிவு எடுக்கும்வரை அல்லா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் அல்லது அது குறித்து விவாதிக்க வேண்டாம் என எனஅனைத்து தரப்பினரையும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah கேட்டுக்கொண்டார். இஸ்லாம் தொடர்பான விவகாரங்களில் மலாய் ஆட்சியாளர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை உட்படுத்திய கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப இந்த விவகாரத்தில் கவனமான முடிவு எடுக்கப்படும். அதிகாரப்பூர்வ சமயம் இஸ்லாம் என்பதோடு , இதர சமயங்கள் அமைதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னதாக சுல்தான் Sharafuddin பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பேட்டி வழங்கினார்.
