முழு நிதியுதவியுடன் தாதிமைத்துறை டிப்ளோமா
படித்தபின் வேலைவாய்ப்பு உறுதி!

🔊To listen to this news in Tamil, Please select the text.
–நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 09:
2022 கல்வியாண்டு எஸ்பிஎம் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு புகழ்பெற்ற தனியார் உயர்க்கல்வி நிறுவனமான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் தாதியர் டிப்ளோமா கல்வி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மருத்துவத் துறை சார்ந்த இந்த தாதிமை பட்டயக் கல்வி, மூன்று ஆண்டுகளுக்குரியது. இதில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி அளிக்கப்படுவதாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பொது உறவு அதிகாரி ஜெயச்சந்திரன்அறிவித்துள்ளார்.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் 5 பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அடிப்படை அறிவியல்-உயிரியல்-இயற்பியல்-வேதியியல் உள்ளிட்ட ஏதாவதோர் அறிவியல் பாடம், இன்னொரு பாடம் என 5 பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதியுடன் தாதிமை டிப்ளோமா கல்வியில் சேரும் மாணவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில் பினாங்கு கெக் லொக் சி தொண்டு மருத்துவமனையில்(Kek Lok Si Charitable Hospital) தாதியாக பணிபுரியும் உத்தரவாதத்தை எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதற்கான நேர்காணல் ஜூன் 21-ஆம் நாள், காலை 9:00 முதல் பகல் 1:00 மணிவரை எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகம், நிர்வாகக் கட்டடம் 2-ஆவது தளத்தில் நடைபெற இருக்கிறது.
செலவில்லாமல் படித்து, எதிர்கால வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள விரும்பும் எஸ்பிஎம் மாணவர்கள், மேல் விவரத்திற்கு திரு. ஜெயச்சந்திரனுடன்(012-6727556) தொடர்பு கொள்ளலாம்.
