29.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

நாடாளுமன்றத்தில் அற்ப விசயங்களைப் பேசும் பாஸ்தன் கண்ணியத்தை குறைத்துக் கொள்கிறது!

🔥 Views : 5
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டிற்குத் தேவையான எத்தனையோ நல்ல அம்சங்களைப் பற்றியோ அல்லது மக்கள் பிரச்சினைகளைப் பற்றியோ நாடாளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக உப்புசப்பில்லாத அற்ப விசயங்களைப் பேசும் பாஸ் கட்சி, தன்னுடைய கண்ணியத்தைக் குறைத்துக் கொள்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் துறை வெள்ளை அறிக்கைமீதான விவாதம் கடந்த வாரம் வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபொழுது, பாஸ் கட்சியைச்சேர்ந்த குவாந்தான் தொகுதி இளம் எம்பி-யான வான் ரசாலி வான் நோர், தாதியர்களின் சீருடை இறுக்கமாக இருப்பதாகவும் உடல் வடிவத்தை அப்படியே அது வெளிப்படுத்துவதாகவும் பேசியது, ஜனநாயகப் பண்பு கொண்ட அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

பொதுவாக, பாஸ் கட்சியினரின் சொல், சிந்தனை யாவும் மத அடிப்படையிலும் இன ரீதியிலும் இருப்பதால் அவர்களால் விசாலமாக சிந்திக்க முடியவில்லை என்று தேசிய அரசியல் மட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles