35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

புதிய அரசியல் கூட்டாளி அம்னோ:ஜசெக-விற்குள் முணுமுணுப்பும் சலசலப்பும் ஓயவில்லை

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜனநாயக செயல்கட்சியுடன்(ஜசெக) இணைந்து புதிய அரசியல் பயணம் மேற்கொள்வதில் தேசிய முன்னணியின் பெரிய அண்ணனான அம்னோ-விற்குள் எந்த அளவிற்கு சஞ்சலமும் சலசலப்பும் ஹொடர்கிறதோ அதே அளவுக்கு ஜசெக-வின் திவிர தொண்டர்களிடமும் குறிப்பாக மூத்த உறுப்பினர்களிடம் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.

காலமெல்லாம் எதிரெதிர் திசைகளில் பயணித்ததுடன் அல்லாமல், தேர்தல் களங்களில் ஒன்றையொன்று எதிர்த்து நின்ற இவ்விரு கட்சிகளையும், ஒற்றுமை அரசு என்னும் புள்ளியில் இணையும்படியான கட்டாயத்தை நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் முடிவு ஏற்படுத்தி விட்டது.

மத-இனவாத அரசியலை முன்னெடுக்கும் பெரிக்காத்தான் கூட்டணியிடம் இருந்து தங்களை மட்டுமல்ல; நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால், இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தின்வழி இணைந்து பயணிக்க வேண்டியதைத் தவிர மாற்றுவழி தற்பொழுது இல்லை என்பதை உணராத தரப்பினர்தான் இன்னமும் அம்னோவிலும் ஜசெக-விலும் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles